சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது
இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 10ம் தேதியில் இருந்து மளமளவென சரிந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 20ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ஒரு பவுன் ரூ.92,080க்கு விற்பனையானது. ஒரே நாளில் ரூ.3,760 சரிவு என்பது இதுவரை இல்லாத இறக்க பார்க்கப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.91,720க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 10ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை பவுனுக்கு ரூ.14,320 வரை குறைந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600க்கும், பவுனுக்கு ரூ.1080 உயர்ந்து ஒரு பவுன் ரூ.92,800க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமின்றி விற்றது. ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், பார் வெள்ளி ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையானது
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ .115 உயர்ந்து ரூ.11,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175க்கும்; ஒரு கிலோ ரூ.1,75,000க்கும் விற்பனையாகிறது.

More Stories
தங்கம் விலைக்கு 3 முக்கியத் தேதிகள்?
இரு வாரங்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு
பிரதமர் மோடியின் அறிவுரையை புறக்கணித்திருந்தால் திவாலாகியிருப்போம்: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை நன்றி