May 28, 2026

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் 

சோழவந்தான் மே 28

 மதுரை மாவட்டம் 

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம்  நடைபெற்றது இந்த நிலையில் சிகர நிகழ்ச்சி ஆன பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சோழவந்தான் மந்தை திடலில் நடைபெற்றது முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சுமார் 7000 பேர் பூக்குழி இறங்கி

 நேர்த்திக்கடனை செலுத்தினர் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  மாரியம்மனை தரிசனம் செய்தனர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டோர் ஆங்காங்கே  பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் வழங்கினர் சமயநல்லூர் டிஎஸ்பி தலைமையில்  சோழவந்தான் மற்றும் காடு பட்டி காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் கோவில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபாஷினி பெருமாள் ஏற்பாட்டில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது அர்ச்சுவர் சண்முகவேல் பூக்குழி  இறங்கினார் பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் அரிமா சங்கத் தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வக்கீல் சிவா உள்பட முக்கிய பிரமுகர்கள் பூக்குழி நிகழ்ச்சியில்கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் சோழவந்தான் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பூக்குழி நிகழ்ச்சி முடிந்த பின்பு சங்கங்கோட்டை கிராமத்தினர் சார்பாக மந்தைக்களத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து பூக்குழி திடலில் இருந்து அம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார் வழிநெடுகிளும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்தனர் பேரூராட்சி அலுவலகம் மார்க்கெட் ரோடு பேரூர் திமுக செயலாளர் சத்ய பிரகாஷ் இல்லம் முத்துக்குமரன் நகை மாளிகை பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் பேரூராட்சி கவுன்சிலர் கொத்தாலம் செந்தில் வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் வருகின்ற இரண்டாம் தேதியை செவ்வாய்க்கிழமை தேரோட்டமும் மூன்றாம் தேதி புதன்கிழமை தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது

Spread the love