மதுரை:
மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி விழா, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவை ஒட்டி, இக்கோயிலில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.
விழாவில், தொழிலதிபர் எம். மணி, கோயில் செயல் அலுவலர் ராஜா, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில், கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், மதுரை ஜெ.ஜெ. நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி அபிஷேகத்தை, அர்ச்சகர் துணைக் கண்ணன் செய்தார்.
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள, ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மதுரை அவனியாபுரம் பகுதியில்,
பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புரதான பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது .
இக்கோவிலில்
குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மிதுன ராசியிலிருந்து கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் இடம் பெறுவதால் சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நவகிரக சாந்தி ஹோமம் கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமம் பூஜைகள் நிறைவு பெற்றபின் நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட குரு பகவானுக்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் குருக்கள் நாகமணிகண்டன், திருக்கோயில்கோவில் பணியாளர்கள்ஏற்பாடு செய்தனர்.

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி