September 25, 2026

ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா முறையீடு செய்தார்.

அவர், இந்த வழக்கில் சிறுமிகளின் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை உயர் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் புலன் விசாரணையை தொடரட்டும். முறையிடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதேபோல, வழக்கறிஞ்ர நிவ்யா, வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Spread the love