புதுடெல்லி: டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு நகன்று மோதியதில் ஏர் இந்தியாவின் 3 விமானங்கள் சேதம் அடைந்தன.
டெல்லியில் நேற்று மாலை 4.40 மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கு மணிக்கு 101 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக்கரங்களுடன் கூடிய விமான படிக்கட்டு வேகமாக நகர்ந்து அருகில் நின்றிருந்த ஏர் இந்தியா விமானங்களை நோக்கிச் சென்றது. அதை தடுத்து நிறுத்த விமான நிலைய பணியாளர்கள் ஓடினர்.
ஆனால், அதற்குள் படிக்கட்டு விமானங்கள் மீது மோதியது. இதில் 3 விமானங்கள் சேதம் அடைந்தன. 2 விமானங்களில் லேசான சேதம் ஏற்பட்டதால், அது உடனடியாக சரி செய்யப்பட்டு பயணத்துக்கு தயாரானது.

More Stories
“உத்தரப் பிரதேசம் நான்காக பிரிக்கப்படும்” – அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி