May 19, 2026

தமிழகத்துக்கு சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை நிலுவையின்றி விடுவிக்க வேண்டும்: தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​துக்கு சமக்ர சிக் ஷா திட்​டத்​தின் ​கீழ், வழங்​கப்​படும் நிதியை நிலு​வை​யின்றி உரிய காலத்​தில் விடுவிக்க வேண்​டும் என்று, ‘தேசிய ஆசிரியர் சங்​கம் – தமிழ்​நாடு’ அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

அகில இந்​திய தேசி​யக் கல்வி சம்​மேளனம் (அகில பார​திய ராஷ்டிரிய சைக் ஷிக் மகா சங்​கம்) அமைப்​பின் தேசிய செயற்​குழுக் கூட்​டம் கர்​நாடக மாநிலம் தார்​வார் நகரில் கடந்த 16, 17-ம் தேதி​களில் நடை​பெற்​றது.

இந்த அமைப்​பில் இணைப்பு பெற்​றுள்ள ‘தேசிய ஆசிரியர் சங்​கம் – தமிழ்​நாடு’ சார்​பில், அதன் தலை​வர் திரிலோகசந்​திரன், மகளிர் அணிச் செய​லா​ளர் சாரு​மதி தேவி ஆகியோர் பங்​கேற்​றனர். கூட்​டத்​தில், பொதுச் செய​லா​ளர் கந்​த​சாமி பேசி​ய​தாவது:

ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டம் நிறைவேற்​றப்​பட்ட நாளுக்கு முன்பு வரை பணி​யில் சேர்ந்த அனை​வருக்​கும் ஆசிரியர் தகு​தித் தேர்வு கட்​டா​யம் என்​ப​தில் இருந்து விலக்கு அளிக்க வேண்​டும். தமிழகத்​துக்கு சமக்ர சிக்க்ஷா (ஒருங்​கிணைந்த கல்​வி) திட்​டத்​தின்​ கீழ், வழங்​கப்​படும் நிதியை நிலு​வை​யின்றி உரிய காலத்​தில் விடுவிக்க வேண்​டும்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம்

மத்​திய அரசு ஊழியர்​களில் 95 சதவீதம் பேர் ஒருங்​கிணைந்த ஒய்​வூ​தி​யத் திட்​டத்தை விரும்​ப​வில்​லை. எனவே, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை மீண்​டும் அமல்​படுத்த வேண்​டும். கல்​வித் தகு​தி​களுக்கு நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யாக தேர்ச்சி மதிப்​பெண் நிர்​ண​யம் செய்​து, ஒரு மாநிலத்​தில் தேர்ச்சி பெற்​றவர்​கள் எந்த மாநிலத்​தி​லும் வேலை​வாய்ப்பு பெற தகுதி வாய்ந்​தவர்​களாக கருதப்பட வேண்​டும். உயர்​கல்விக்​கான ஊக்க ஊதி​யம் என்​பது 2 ஆண்டு ஊதிய உயர்வு கொண்​ட​தாக இருக்க வேண்​டும்.

8-வது ஊதி​யக் குழு பரிந்​துரை

மத்​திய, மாநில அரசுகள் இதை செயல்​படுத்த வேண்​டும். 8-வது ஊதி​யக் குழு பரிந்​துரைகளை விரைந்து அமல்​படுத்தி 2026 ஜன.1-ம் தேதி முதல் முன்​தே​தி​யிட்டு வழங்க வேண்​டும். அதில் குறைந்​த​பட்ச அடிப்​படை ஊதி​யம் ரூ.50,000, அடிப்​படை ஊதி​யத்​தின் சதவீத அடிப்​படை​யில் வீட்டு வாடகைப்​படி வழங்​கப்பட வேண்​டும்.

குறைந்​த​பட்ச ஒய்​வூ​தி​ய​மாக ரூ.25,000 நிர்​ண​யிக்​கப்பட வேண்​டும். எஸ்​சி, எஸ்டி கல்வி உதவித் தொகை பெறு​பவர்​கள் தேசிய வரு​வாய்​வழி, திறனறி​வுத் தேர்வு (என்​எம்​எம்​எஸ்) திட்​டத்​தில் உதவித் தொகை பெற மத்​தி​யக் கல்வி அமைச்​சகம் அனு​ம​திப்​பது இல்​லை. இதை சரி செய்​ய வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.

Spread the love