தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல்-2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் மாநகராட்சி, தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி க.சங்கமித்திரை. இணை இயக்குனர் (வேளாண்மை) திரு.எம்.ஆதிசாமி, துணை இயக்குனர் (வேளாண் விற்பனை வணிகம்) எஸ்.சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதிஸ்குமார், வேளாண் விற்பனை சங்க செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி பி.மீனாம்பிகை ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல்-2026

More Stories
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்