சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களுக்கு பயணிகளின் அதிக தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில், சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.
இதன்படி, தாம்பரம் – போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06059) புறப்பட்டு, மறுநாள் காலை சென்றடைகிறது. இந்த ரயிலின் இரண்டு சேவைகள் (ஜூன் 20, 27) நீட்டிக்கப்பட்டுள்ளன.
மறுமார்க்கமாக, போடிநாயக்கனூர் – தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06060) சேவை வரும் ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு