திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாத பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஒட்டப்படுகிறது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சீ.ரமேஷ் கடந்த மே 24-ம் தேதி திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தார்.
அப்போது, கோயில் பிரசாத விற்பனை நிலை யத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா?, உணவு பொருட்களின் தயா ரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக என ஆய்வு செய்தார்.
அப்போது, தேதி குறிப்பிடா மல் விற்பனை செய்வதை கண்டறிந்த அமைச்சர் உடனடியாக தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் கோயில் களில் பிரசாதங்கள், உணவு பொருட்களை விற்பனை செய் யக்கூடாது என உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, திரு வண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர் களுக்கு விற்பனை செய்யப் படும் பிரசாதங்களின் பாக் கெட்டுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி ஆகும் தேதி அச்சிட்டு ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை கோயிலில் விற் பனை செய்யப்பட்டு வந்த பிரசாதங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா ஐந்தாம் நாள் திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உபயதாரர் கஜேந்திரன் குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.
பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்