சென்னை: நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், தேமுதிக, விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசும்போது, “புதிதாக வந்திருக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகள். நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
விஜய் எங்கள் வீட்டு பிள்ளை. அவருக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் இல்லை. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யப்பட்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்