September 13, 2026

திராவிட முன்னேற்றக் கழகம் சாப்பில்முதல்-அமைச்சரின் ஆவண பேச்சை கண்டித்து திருப்பூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 13

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, 116 நாள் ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வர் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளிக்காமல், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மற்றும் மு.கஸ்டாலின் ஆகியோர் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் அவதூறாகப் பேசியதாகக் கூறி,திமுக சார்பில்  மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று

வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த

ஆர்ப்பாட்டத்தில், மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம

கிருஷ்ணன், உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும்,மாவட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சட்டமன்றத்தில் அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டுப்பட்டது.

Spread the love