August 28, 2026

திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்

அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

Spread the love