September 6, 2026

திருப்பூர் அருகே பூலுவபட்டியில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்….

திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டியில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் தொடங்கியது.இந்த முகாமின் துவக்க விழாவில், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சத்தியபாமா மற்றும் எஸ்.பி.என். எஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லீலாவதி திருக்குமரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து, சங்கர நேத்ராலயாவின் நவீன மொபைல் கண் அறுவை சிகிச்சை மைய பேருந்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விழாவில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் சமூகத் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாம், பூலுவபட்டியில் உள்ள எஸ்.பி.என். எஸ்போர்ட்ஸ் வளாகத்தில் தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்துதல், கருப்பு கண்ணாடி, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாவின் நவீன மொபைல் கண் அறுவை சிகிச்சை பிரிவு மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் தேவையான மருத்துவ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.பூலுவபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கண் சிகிச்சை பெற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love