திருப்போரூர் அடுத்த கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் சிதிலம் அடைந்த நிலையில் ஊர் பெரியோர்களால் ஆலயத்தை பூரணமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜையுடன் துவங்கியது, அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை என பல்வேறு வேள்விகள் முடிவுற்ற நிலையில், மங்கள வாத்தியம் வானவேடிக்கைகள் முழங்க யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் விமானத்திற்கும் மூலவர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி விநாயகரை தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்போரூர் அடுத்த கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

More Stories
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா கோலாகலம்
வடபழனி கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் – ‘அரோகரா’ முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பிரசாதங்களுக்கு தயாரிப்பு, காலாவதி தேதி ஒட்டும் பணி தீவிரம்