June 5, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.ஆ.மகாராசன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், மறவபட்டி, மரிக்குண்டு, ஆசாரிபட்டி, உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுபயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், எம்.பி.பழனி, கோவிந்தராஜ், எஸ்.டி.சிவா அர்ச்சுணன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். கிளை செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Spread the love