சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியான நிலையில், தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.
2106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு படைகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விமான நிலையங்களையும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி ஆகியவற்றை கண்காணிக்க, சிறப்பு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு பகுதிகளில் சுங்கச் சோதனைகளை கண்காணிக்க, சுங்கத்துறை இணை ஆணையர் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சென்னை விமான நிலைய கார்கோ பகுதிகளில், சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி பகுதிகளில் சுங்கச்சோதனை பிரிவுகளில் கண்காணிப்பதற்காக இணை ஆணையர் அந்தஸ்தில் மற்றொரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
You May Like
Your fingers can tell you a lot about your personality. What kind of fingers do you have?Tips and Tricks
Need a mouse that has unmatched performance?Upgrade Your Setup with the PX2 Metal 2.4G Wireless Mute Mouse Experience the perfect blend of sleek design and whisper-quiet performance with the PX2 Metal Wireless Mouse.TM Enterprises
Bee Keepers of India Selling Pure Honey online to Indian consumers via Ecommerce WebsiteHoney extracted from Bee Farms, unprocessed honey, unheated honey – Helps in reaching fitness goals – Bee Keepers also sell Pollen, Bee Wax and Infused HoneyScrolling Bee India
இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள், பார்சல்களை தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்துக்கிடமான தங்கம், வெள்ளி, மின்சாதன பொருட்கள், போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், கணக்கில் வராத ரொக்கம் போன்றவைகள் வந்தால், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று முழுமையாக விசாரித்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித் துறையினரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளனர்.

More Stories
நாமக்கல் விவசாய முன்னேற்றக் கழகம் PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் விவசாய சங்கம் சார்பாக போட்டியிட கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டமானது நாமக்கல் முல்லை நகர் பகுதியில் நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல்:தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல்லில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உரிமத்துடன் கூடிய கை துப்பாக்கி இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மாதிரி கை துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு நாமக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது