August 11, 2026

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தினசரி வருமானம் ரூ.8,312 கோடி

வாஷிங்டன்: உல​கின் பெரும் பணக்​கார​ரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த ஓராண்​டில் மட்​டும் தின​மும் சராசரி​யாக சுமார் ரூ.8,312 கோடியை வரு​மான​மாக ஈட்​டி​யுள்​ளது தெரியவந்துள்​ளது.

‘பெஸ்ட் புரோக்​கர்​ஸ்’ நிறு​வனம் ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்​டியலை அடிப்​படை​யாகக் கொண்டு நடத்​திய ஆய்​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 2026 ஜூலை 27 ஆகிய தேதி​களுக்கு இடைப்​பட்ட ஓராண்டு காலத்​தில் தொழில​திபர் எலான் மஸ்க்​கின் சொத்து மதிப்பு சுமார் 320 பில்​லியன் டாலர்​கள் (சு​மார் ரூ.30 லட்​சம் கோடி) அதி​கரித்​துள்​ளது.

கடந்த ஜூன் 12-ம் தேதி ‘ஸ்​பேஸ் எக்​ஸ்’ நிறு​வனம் பொதுப் பங்குகளை வெளி​யிட்டு (ஐபிஓ) பங்​குச் சந்​தை​யில் பட்டியலிடப்பட்​ட​போது, உலகின் முதல் மகா கோடீஸ்​வர​ராக எலான் மஸ்க் உரு​வெடுத்​தார். கடந்த மாதம் அந்த நிறு​வனப் பங்கு​கள் கடுமை​யான சரிவைச் சந்​தித்​த​தால், தற்​போது அவரது சொத்து மதிப்பு 690 பில்​லியன் டாலர்​களாக உள்​ளது.

எலான் மஸ்க் தவிர, மைக்​கேல் டெல், லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்​றும் டெதர் நிறு​வனத்​தின் ஜியான்​கார்லோ தேவாசினி ஆகியோர் அதிக லாபம் ஈட்​டியுள்​ளனர். டெல் டெக்​னாலஜிஸ் நிறு​வனத்​தின் நிறு​வனர் மைக்​கேல் டெல், ஓராண்​டில் 107.6 பில்​லியன் டாலர்​களைக் கூடு​தல் லாப​மாக ஈட்டி 2-ம் இடத்​தில் உள்​ளார்.

‘டீப்​சீக்’ நிறு​வனர் லியாங் வென்ஃபெங்​கின் சொத்து மதிப்பு 2025-ல் 1 பில்​லியன் டால​ராக இருந்​தது, 2026-ல் அது 39.5 பில்​லியன் டால​ராக உயர்ந்​துள்​ளது. இது ஒரே ஆண்​டில் 3,850% வளர்ச்சியாகும். இதன் மூலம் உலகின் டாப்​-50 பணக்​காரர்​கள் பட்​டியலில் அவர் இணைந்​துள்​ளார். பங்​குச் சந்தை தற்​காலிகச் சரிவைச் சந்​தித்த போதி​லும், செயற்கை நுண்​ணறிவு மற்​றும் விண்​வெளித் துறை​ ஆதிக்​கம், அவரது சொத்து மதிப்பை உச்சத்துக்​கு எடுத்​துச்​ சென்று உள்​ளது.

Spread the love