August 11, 2026

நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூர்வாரும் பணி 2ம் கட்ட துவக்க விழா 

ஆகஸ்ட் 11

நல்லாறு பாதுகாப்பு இயக்கம்:

அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் நா.குமார் அவர்களின் பெரும் முயற்சியில் நல்லாறு தூர்வாரும் பணி 2ம் கட்ட துவக்க விழா பூண்டி பாலம் அருகில் நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி ஆணையாளர் பாலமுருகன் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் முன்னாள் நகர மன்ற தலைவர் திருமதி லதா,மற்றும் நகர மன்ற துணைத்தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இயக்க செயல்பாடுகளை குறித்து கோவிந்தராஜ்,வெங்கடாசலம், நட்ராஜ்,அருணாச்சலம், பாலசுப்ரமணியம், ஆகியோர் திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து மக்களிடையே கருத்துக்களை எடுத்துரைத்தனர் அப்போது பேசி அவர்கள் ஒரு காலத்தில் 150 அடி முதல் 250 அடி வரை பிரம்மாண்டமாக அகன்று ஓடிய இந்த நல்லாறு இன்று பல இடங்களில் குறுகிய ஒரு சாக்கடை போல் மாற்றப்பட்டுள்ளதாகவும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும் வரலாற்று சிறப்புமிக்க கொங்கு நாட்டில் உள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இந்த நல்லாறு நதிக்கரையில் தான் இருப்பதாகவும் மழை காலங்களில் காற்றின் தண்ணீர் நேரடியாக கருவறைக்குள் புகுந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வுகளும் முன்பிருந்த காலத்தில் நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்….

Spread the love