திருமலை: வரும் நவம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான பல்வேறு ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுகிறது.
இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து, 21-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
24-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்கபிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், இதே நாள் மதியம் 3 மணிக்கு மாற்று திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை அனைத்தும் ttdevasthanams.ap.gov.in என்ற இணைய தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆடி அமாவாசை: திருச்சி – ஸ்ரீரங்கம் காவிரியில் பக்தர்கள் வெள்ளம்
ஆடி அமாவாசை: புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்