July 3, 2026

நாட்றம்பள்ளி  காமராஜர் பகுதியில் மகா கும்பாபிஷேக விழா

நாட்றம்பள்ளி, ஜூலை 03

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி காமராஜர் நகர் B. பந்தாரப்பள்ளி ஸ்ரீ மாரியம்மன்  ஸ்ரீ முத்தூரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 10.45 மணியளவில் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்  மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில்1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

Spread the love