நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித் தீவன அரவை ஆலைகளில், கோழித்தீவனத்தில் சேர்ப்பதற்காக, ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக, நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், நாமக்கல் மாவட்டத்தில் 3 கோழித்தீவன ஆலைகளில், 25 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழித் தீவன அரவை ஆலையில் இருந்த சிவராஜ் (42), முருகேசன் (32), தனசேகரன் (42), ரவிச்சந்திரன் (42), சங்கர் (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான கோழிப் பண்ணை அதிபர்கள் தேவராஜ், மனோ பாரதி, கார்த்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்