ஒட்டாவா: பங்குச் சந்தை மீதான மோகத்தால் கனடாவில் வசிக்கும் இந்திய இளைஞர் ரூ.2.3 கோடியை இழந்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்சய் சாப்ரா (31), கனடாவின் கிரேட்டர் டொரன்டோ நகரில் வசித்து வருகிறார். அவருக்கு 4 வயது இருக்கும்போது இந்தியாவில் இருந்து கனடாவுக்கு அவரது பெற்றோர் குடிபெயர்ந்தனர். சிறு வயது முதலே அக்சய் சாப்ராவுக்கு பங்குச் சந்தை மீது மோகம் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது அவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.2.3 கோடியை இழந்துள்ளார்.
இதுகுறித்து அக்சய் சாப்ரா கூறியதாவது: கடந்த 2024, 2025-ம் ஆண்டுகளில் கனடாவில் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றினேன். சில காலம் தனியார் நிறுவனங்களில் பாதுகாவலராக பணி செய்தேன். அப்போது முதலே கனடா பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினேன். இதன்மூலம் கணிசமான லாபம் கிடைத்தது.
பின்னர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கைநிறைய ஊதியமும் கிடைத்தது. இதன் பிறகு பங்குச் சந்தையில் அதிக தொகையை முதலீடு செய்யத் தொடங்கினேன். ஒரு நாளில் 16 மணி நேரம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மூழ்கினேன். சில நேரங்களில் லாபம் கிடைத்தது. சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் பங்குச் சந்தை மீதான மோகத்தால் எனது சேமிப்பு, ஊதியம் என அனைத்தையும் பங்குகளில் முதலீடு செய்து வந்தேன்.
அண்மையில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தேன். இதில் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.2.3 கோடியை இழந்து விட்டேன். ஆனாலும் பங்குச் சந்தை வர்த்தகம் மீதான எனது ஈர்ப்பு குறையவில்லை. தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ. 1,11,600க்கு விற்பனை!
ரூ.2 லட்சம் கோடியை எட்டிய ஜிஎஸ்டி வசூல்
200 கி.மீ மைலேஜ் தரும் ‘ஏதர் கோனார்க்’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்