திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்த வெளியூர் பக்தர்கள் 3 பேர், தனியார் காவலாளிகள் 2 பேரிடம் விரைவு தரிசனம் குறித்து கேட்டுள்ளனர். இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்று கொண்ட காவலாளிகள், கோயிலில் இருந்த மற்றொரு காவலாளி மூலம் விரைவாக தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், காவலாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனத்தெரியவந்ததையடுத்து
காவலாளிகள் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும், சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து இணைஆணையர் உத்தரவிட்டார்.

More Stories
25-06-2026
“சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது
அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் இரண்டாவது கும்பாபிஷேக விழா