July 30, 2026

பழனி காளிகாம்பாள் கோவில்  ஆடித்திருவிழாபக்தர்கள் குவிந்தனர்.

 பழனி ஜூலை- 29

 பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள  ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் ஆடி திருவிழா  நடைபெற்றது. இதையொட்டி நேற்று  வரட்டாற்றில் இருந்து, தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு  காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. அதன் பின்பு பக்தர்களுக்கு  அன்னதானம்  நடைபெற்றது. பின்பு பழனி சரவண பொய்கையில் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சந்தன கருப்பணசாமி அழைத்துவரும் நிகழ்ச்சியும், முளைப்பாரி எடுத்து வரும்  நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்பு காளிகாம்பாளுக்கு மாவிளக்கு வைத்து, சந்தன காப்பு அலங்காரத்துடன்,  வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான விழா ஏற்பாடுகளை, பழனி டவுன் விஸ்வபிராமண மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.

Spread the love