பழனி மார்ச் 18
பழனியில் சண்முக நதி பாலம் உள்ளது. இப்பாலம் பழனி டு உடுமலை சாலை செல்லும் வழியில் உள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளது. அக்ரஹாரம் கலைமுத்தூர் நெய்க்காரப்பட்டி ஆகிய ஊர்களுக்கு குடிநீர் இக்குழாய்கள் வழியாக தான் செல்கிறது. இந்நிலையில் நேற்று குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் நீரூற்று போல பத்தடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்தது. இதனால் வாகன ஓட்டுனர்கள் நனைந்தபடி சென்றனர். பின்பு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்பு ஊழியர்கள் உடைந்த குழாய்களை சீரமைத்தனர்.

More Stories
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/
Rain | மார்ச் 20 வரை இப்படித்தான்.. விடாமல் கொட்டப்போகுது கனமழை.. கோடையில் வெதர்மேன் கொடுத்த குளுகுளு அப்டேட்..!
தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசினார்.