பழனி மார்ச் 20
பழனி முருகன் கோவிலின் உபகோவில் பெரியநாயகி அம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி முத்துக்குமார சுவாமி சன்னதியில் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் பெரியநாயகி, சிவன், நடராஜர், சிவகாமி அம்மாள், சோமாஸ்கந்தர், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றது. அதன் பின்பு பஞ்சாங்க புத்தகங்களுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. பின்பு கோயில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம் பஞ்சாங்கம் வாசித்தார். இதில் சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர்கள் சுப்புராஜ், கீதாசுப்புராஜ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மணியம் ரஞ்சித், கட்டிட வல்லுநர் நேரு, மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
நாமக்கல் விவசாய முன்னேற்றக் கழகம் PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் விவசாய சங்கம் சார்பாக போட்டியிட கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டமானது நாமக்கல் முல்லை நகர் பகுதியில் நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல்:தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல்லில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உரிமத்துடன் கூடிய கை துப்பாக்கி இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மாதிரி கை துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு நாமக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நியமனம்