பழனி மார்ச் 20
பழனி முருகன் கோவிலின் உபகோவில் பெரியநாயகி அம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி முத்துக்குமார சுவாமி சன்னதியில் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் பெரியநாயகி, சிவன், நடராஜர், சிவகாமி அம்மாள், சோமாஸ்கந்தர், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றது. அதன் பின்பு பஞ்சாங்க புத்தகங்களுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. பின்பு கோயில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம் பஞ்சாங்கம் வாசித்தார். இதில் சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர்கள் சுப்புராஜ், கீதாசுப்புராஜ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மணியம் ரஞ்சித், கட்டிட வல்லுநர் நேரு, மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு