பழனி ஜூன் 23
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆணி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்பட பதினாறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு சிறப்பு அலங்காரமும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. பின்பு நடராஜரும் சிவகாமி அம்மையாரும் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார்.

More Stories
திருக்கழுக்குன்றம் திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்
திருத்தணியில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம்