பழனி ஆகஸ்ட் 23
பெங்களூரில் இருந்து பழனிக்கு ஆம்னி பஸ்ஸில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக பழனி டவுன் போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி பழனி டவுன் போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார், பஸ் நிலைய பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பெங்களூரில் இருந்து பழனிக்கு வந்த தனியார் பஸ்சை தடுத்து சோதனை செய்ததில், பஸ்ஸில் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்த டயரை சோதனை இட்ட பொழுது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை பழனியைச் சேர்ந்த இரண்டு பேர் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையொட்டி பழனி மார்க்கண்டேயன் தெருவை சேர்ந்த ரியாஜுதீன் வயது 30, அவரது தந்தை ரகுமான் வயது 68 மேலும் பஸ் டிரைவர் ஈரோட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 38 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட 17 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு
ஈரோடு