பழனி ஆகஸ்ட் 10
பழனியில் முன்னாள் மாணவ மாணவியர் 50 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
பழனி அருகே உள்ளது ஆயக்குடி ஓபுளாபுரம் இங்கு ஐடிஓ மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1977 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. பழனி அடிவாரம் தனியார் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி ராஜா ரவிவர்மா எம் பி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். முஹம்மது உசேன், யூகோ வங்கி முன்னாள் பொது மேலாளர் குழந்தை வேல், கல்யாணசுந்தரம், பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் முன்னாள் பேராசிரியர் ராஜா சின்னக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 1977 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஒவ்வொரு மாணவரும், நினைவு கூர்ந்து பேசினர். அது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. இதில் பெண்களும் முன்னாள் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பரிசுகளும் மதிய விருந்தும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுதாகர், முன்னாள் ஆர்டிஓ அசோகன், முன்னாள் தாசில்தார் ராஜேந்திரன், அக்ரி சையது இப்ராகிம், ஜானகிராமன், திவாகரன், ஆயக்குடி ராதாகிருஷ்ணன், ராஜ பிரபாகரன், உடுமலை நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகசாமி, எல்ஐசி ராஜசேகர், நரசிம்மன், ராஜேந்திரன், பிரபாவதி, மீனாட்சி, நந்தகுமார், ரவிச்சந்திரன், நாட்ராயன், ராஜா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

More Stories
10-08-2026
நெருப்பெரிச்சல் மண்டல் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்,,
ஈரோடு