November 15, 2026

பாவை அறக்கட்டளை சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள்!

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம் எல்.கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட லாபத்தை, அச்சங்குடி, கண்ணை, எல்.கருங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாவை அறக்கட்டளை சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் வேட்டி, சட்டை, துண்டு, சேலை உள்ளிட்ட புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலர் எஸ்.இராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த வே.பரமேஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாவை அறக்கட்டளையின் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கனகராஜ் செய்திருந்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் தீபாவளி மகிழ்ச்சியில் பங்கெடுத்த பாவை அறக்கட்டளையின் மனிதநேயப் பணி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

Spread the love