June 5, 2026

பேச்சு சுதந்திர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

சென்னை: ‘அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு பேச்சு சுதந்​திரத்​துக்​கான உரிமை பாது​காக்​கப்பட வேண்​டும்’ என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்​தின் முதலா​வது பட்​டமளிப்பு விழா கோட்​டூர்​புரத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. விழா​வில் பள்​ளிக்​கல்வி மற்​றும் செய்​தித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, 39 மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார்.

இதில் சிறந்த மாணவர் விருது டி.அன்​பு​தாசன் மற்​றும் வி.ஆரத்தி ஆகியோ​ருக்​கும், திறன் மேம்​பாட்டு விருது மாணவர் பி.சுரேந்​தருக்​கும் அளிக்​கப்​பட்​டது.

விழா​வில் சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்​தின் தலை​வர் ‘இந்​து’ என்​.ரவி பேசி​ய​தாவது: தற்​போதைய தமிழக அரசில் முதல்​வர் விஜய் உட்பட பலருக்​கும் ஊடகம் மற்​றும் தகவல் தொடர்பு பற்றி நன்​றாகத் தெரி​யும். எனவே, ஊடக சுதந்​திரம் மற்​றும் பேச்சு சுதந்​திரத்​துக்​கான சிறந்த சூழலை உரு​வாக்​கு​ வதற்கு இதுவே சரி​யான தருண​மாகும்.

விமர்​சனங்​கள் எவ்​வளவு கடுமை​யாக அல்​லது நியாயமற்​ற​தாக இருந்​தா​லும், அதை சகித்​துக்​கொள்​ளும் பரந்த மனப்​பான்மை இருக்க வேண்​டும். மேலும், பேச்சு சுதந்​திரம் குறித்த எந்​தவொரு நடவடிக்​கை​யும் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் வரம்​பு​களுக்கு உட்​பட்​ட​தாகவே இருக்க வேண்​டும்.

சமூக ஊடகங்​களின் வளர்ச்​சி​யால், செய்​தி​களை யார் வேண்​டு​மா​னாலும் எளி​தாகப் பகிரலாம் என்ற நிலை வந்​து​விட்​டது. ஆனால், சரி​யான பயிற்சி பெற்​றவர்​கள் இல்​லாத​தால் உண்​மை​யான செய்​தி​கள், நேர்மை மற்​றும் நல்ல கருத்​துகள் குறைந்​து​விட்​டன.

இந்த கால​கட்​டத்​தில் நாளிதழ், தொலைக்​காட்சி முதல் சமூக வலை​தளங்​கள் வரை ஊடகங்​கள் பெரு​கி​விட்​டன. இதனால்​தான் சென்னை இதழியல் நிறு​வனம் போன்ற அமைப்​பு​கள் வழங்​கும் பயிற்சி மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கப் போகிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அதைத்​தொடர்ந்து அமைச்​சர் ராஜ்மோகன் பேசி​ய​தாவது: சென்னை இதழியல் கல்வி நிறு​வனம் முந்​தைய அரசால் உரு​வாக்​கப்​பட்​டது. அரசி​யல் வேறு​பாடு​களைத் தாண்​டி, அவர்​களுக்கு எனது பாராட்​டு​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இது​போன்ற கடந்த அரசின் அனைத்து நல்ல பணி​களை​யும் இந்த அரசு தொடரும். ஊடகங்​கள் ஏதோ ஒரு கட்சி அல்​லது கொள்​கைக்​காக இல்​லை; மக்​களுக்​காக என்​பதை நினை​வில் கொள்ள வேண்​டும்.

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு பேச்சு சுதந்​திரத்​துக்​கான உரிமை பாது​காக்​கப்பட வேண்​டும். எவ்​வளவு வேறு​பாடு​கள் இருந்​தா​லும், இந்த அரசு மக்​கள் நலனுக்​காகவே செயல்​படும். மக்​கள் பிரச்​சினை​களில் எப்​போதும் ஒற்​றுமை​யாகவே நிற்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்​தின் தலைமை இயக்​குநர் ஏ.எஸ்​.பன்​னீர்​செல்​வன், மாணவர்​கள், பெற்​றோர்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

Spread the love