September 4, 2026

மகனை கல்​லூரி​யில் சேர்க்க 3,500 கி.மீ. காரில் பயணித்த குடும்​பம்

பெய்​ஜிங்: சீனா​வின் கிழக்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஷான்டாங் மாகாணத்​தின் ஸாவோஷு​வாங் நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் சமீபத்​தில் தனது பள்ளி படிப்பை முடித்​தான்.

இதையடுத்​து, வடமேற்கு சீனா​வில் உள்ள ஷின்​ஜி​யாங் மாகாணத்தின் கரமே​யில் உள்ள ஷின்​ஜி​யாங் மருத்​து​வக் கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்​தது. ஸாவோஷு​வாங் மற்றும் கரமே நகரங்​களுக்கு இடையே​யான பயண தூரம் 3,500 கி.மீ. ஆகும். ஆனாலும் சிறு​வனின் தந்தை கெங், மகனை தனியாக அனுப்பி வைக்​காமல், அவரே காரில் கொண்​டு​போய் விட முடிவு செய்​தார்.

இந்த பயணத்​தில் கெங்​கின் மனை​வி, மகள், மரு​மகன் மற்​றும் அவரது தந்தை ஆகியோ​ரும் இணைந்​தனர். ஸாவோஷு​வாங்​கில் இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதி புறப்​பட்ட அவர்​கள், நான்கு நாட்​கள் கழித்​து, கரமே நகரத்​தில் உள்ள கல்​லூரியை அடைந்​தனர்.

இந்த பயணத்தை மறக்க முடி​யாத​தாக ஆக்​கு​வதற்​காக, கெங், காரின் பின்​பக்​கக் கண்​ணாடி​யில், “மகனை கல்​லூரி​யில் சேர்க்கப் போகிறோம். ஷான்​டாங்​கின் ஸாவோஷு​வாங்கிலிருந்து ஷின்​ஜி​யாங்​கின் கரமேக்கு செல்​கிறோம்” என்று சீன எழுத்​துக்​களில் ஸ்ப்ரே பெயிண்ட் அடித்​தார்.

இது, வழிநெடு​கிலும் வாகன ஓட்​டிகள், பொது​மக்​களின் கவனத்தை ஈர்த்​தது. கெங், அவரது மனை​வி, அவர்​களது மகள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மாறி மாறி காரை ஓட்​டினர். அவர்​கள் பாது​காப்​புக்​காக அடிக்​கடி நிறுத்​தி​யதுடன், வழி​யில் அவ்​வப்​போது சுற்​றுலாத் தலங்​களுக்​கும் சென்று வந்​தனர்.

கெங் இதுகுறித்து கூறுகை​யில், “வி​மானம், ரயி​லில் செல்​வதை விட இது செலவு அதி​கம். ஆனாலும் காரில் பயணம் செய்​வது பல நன்​மை​களை அளிக்​கிறது. நாம் நிறைய பொருட்​களை எடுத்​துச் செல்​லலாம், விரும்​பும் போதெல்​லாம் நிறுத்​திக் கொள்​ளலாம். மிக முக்​கிய​மாக, இந்​தப் பயணம் நீடித்த நினை​வு​களை உரு​வாக்​கு​கிறது” என்​றார்.

கெங் குடும்​பத்​தின் இந்த பயணம் குறித்த இந்த செய்தி சீன சமூக ஊடகங்​களில் வைரலானது. பலரும் அந்த குடும்​பத்​துக்கு பாராட்டு​களை தெரி​வித்​தனர். “என்ன ஒரு மகிழ்ச்​சி​யான குடும்பம்! அவர்​கள் பகிர்ந்​து​கொள்​ளும் வலு​வான பிணைப்பை நான் பாராட்​டு​கிறேன்” என்று ஒரு பயனர் குறிப்​பிட்​டார்.

Spread the love