July 3, 2026

மணிப்பூர் வன்முறைக்கு மோடி அரசின் பிரித்தாளும் கொள்கையே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: மணிப்​பூர் மாநிலம் பல ஆண்​டு​களாக எரிந்து கொண்​டிருக்​கிறது.

இப்​போது மீண்​டும், வெறுப்பு மற்​றும் வன்​முறைத் தீயில் 20 வீடு​கள் சாம்​பலாகி​விட்​டன. இரண்டு அரசுகள் (மத்​திய மற்​றும் மாநில அரசுகள்) மற்​றும் குடியரசுத் தலை​வர் ஆட்சி போன்ற அதி​காரங்​கள் இருந்​த​ போ​தி​லும், அங்​குள்ள மோதல் தீவிரமடைந்து வரு​கிறதே தவிர குறைந்​த​பாடில்​லை.

ஆயிரக்​கணக்​கான மக்​கள் தங்​களது உயிர்​களை இழந்​துள்​ளனர்; எண்​ணற்ற குடும்​பங்​கள் சிதறிப்​போ​யுள்​ளன. மணிப்​பூர் மக்​கள் அனுப​வித்து வரும் இந்த தாங்க முடி​யாத வேதனையை கற்​பனை செய்து பார்ப்​பது கூட கடின​மாக உள்​ளது. மதம், சாதி, மொழி, பிராந்​தி​யம் மற்​றும் அடை​யாளத்​தின் பெய​ரால் மக்​களைப் பிரித்தாளும் மோடி அரசின் பிரி​வினை​வாத சித்​தாந்​தத்​தின் விளைவு​தான் இது.

இன்று மணிப்​பூர் மட்​டுமின்றி ஒட்​டுமொத்த நாடும் பிரதமரிடமிருந்து எந்​தவொரு தீர்க்​க​மான நடவடிக்​கை​யை​யும் எதிர்​பார்க்​க​வில்​லை; குறைந்​த​பட்​சம் ஆறு​தலாக இரண்டு வார்த்தைகள் கூட அவரிட​மிருந்து வராதா என்று ஏங்​கி, தங்​களின் நம்​பிக்​கையை இழந்​து​விட்​டது. மணிப்​பூர் மாநிலம் இதை​விடச் சிறந்த அமை​தி​யான சூழலுக்​குத் தகு​தி​யானது. அதற்கு இந்தியாவை ஒன்​றிணைப்​பது ஒன்​று​தான் ஒரே வழி. இவ்​வாறு ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்

Spread the love