போபால்: மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் டோரஹா கிராமத்தில் மதரசா பள்ளி உள்ளது. குடியரசு தினத்தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் சிங் கூறும்போது, ”டோரஹா கிராமத்தில் உள்ள மதரசாவின் மவுலானா எனது பழைய நண்பர். குடியரசு தினத்தன்று மாணவர்களிடையே உரையாற்றுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்று வரும் கல்விக்காக அவர்களுக்கு நான் வாழ்த்து கூறினேன். பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்துக்கு அறிவொளி புகட்டி வருவதால், புனித குரானுடன் அதையும் படிக்குமாறு மாணவர்களிடம் கூறினேன்” என்றார்.

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்