June 26, 2026

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்? – முர்முவுடன் அமித் ஷா சந்​திப்பு

குடியரசு தலைவர் திர​வுபதி முர்​முவை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சந்திப்பு

புதுடெல்லி: மத்​திய அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்யப்படலாம் என்ற ஊகங்​களுக்கு மத்​தி​யில், குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்​முவை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று சந்​தித்து பேசி​னார்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை பிரதமர் மோடி கடந்த செவ்​வாய் கிழமை அன்று சந்​தித்து பேசி​னார். இந்​நிலை​யில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும், திர​வுபதி முர்​முவை நேற்று சந்​தித்து பேசி​னார். கேரளாவை சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் ஜார்ஜ் குரியன் தனது மாநிலங்​களவை உறுப்​பினர் பதவிக் காலம் முடிந்​த​தால் மத்​தி​ய அமைச்​சர் பதவி​யில் இருந்து ராஜி​னாமா செய்​தார். அவரை மாநிலங்​களவைக்கு பாஜக மீண்டும் நியமிக்​க​வில்​லை.

ரயில்வே இணை​யமைச்​ச​ராக இருந்த ரவ்​நீத் சிங்​கின் மாநிலங்களவை உறுப்​பினர் பதவிக்​கால​மும் கடந்த 21ம் தேதி நிறைவடைந்​தது. இவரும் மாநிலங்​களவைக்கு மீண்​டும் நிறுத்தப்பட​வில்​லை. மத்​திய அமைச்​சர்​கள் சிலருக்கு அவர்​களது சொந்த மாநிலங்​களில் கட்சி பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. சாலை போக்குவரத்து துறை இணை​யமைச்​சர் ஹர்ஸ் மல்​ஹோத்ரா டெல்லி பாஜக தலை​வ​ராக கடந்த மாதம் நியமிக்​கப்​பட்​டார்.

மத்​திய நிதித்​துறை இணை​யமைச்​சர் பங்​கஜ் சவுத்​ரி, உ.பி. பாஜக தலை​வ​ராக கடந்​தாண்டு டிசம்​பரில் நியமிக்​கப்​பட்​டார். இதனால் மத்​திய அமைச்​சரவை விரை​வில் மாற்​றம் செய்​யப்​படலாம் என கூறப்​படு​கிறது. இதன் பின்​னணி​யில் பிரதமர் மோடி​யும், உள்துறை அமைச்​சர் அமித் ஷாவும், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை அடுத்தடுத்து சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love