மத்திய அரசின் பட்ஜெட் மிகவும் மந்தமான பட்ஜெட்டாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாட்டின் முன் எழுந்துள்ள பல சவால்களை மத்திய நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை. ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் செலவினம் குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலதனச் செலவு குறைந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன.
நிதிப்பற்றாக்குறை சொற்ப அளவாக 0.1 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வியூகப்படி பார்த்தால் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு சற்றும் ஈடுகொடுக்காத மந்தமான பட்ஜெட்டாக இருக்கிறது. இதை மந்தமான பட்ஜெட் என்றே சொல்லலாம்.
நாட்டின் உண்மையான நெருக்கடி விஷயங்களுக்கு பட்ஜெட்டில் எந்தப் பதிலும் இல்லை. வேலையில்லாத இளைஞர்கள், உற்பத்தி வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுதல், வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைதல், துயரத்தில் இருக்கும் விவசாயிகள் உள்ளிட்ட நாட்டின் உண்மையான சவால்களை மத்திய அரசு கவனிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறும்போது, “நாட்டில் தலைவிரித்தாடி வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறித்து பட்ஜெட்டில் எந்தவித பதிலும் இல்லை. நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை. மேலும் மாநில வளர்ச்சிகளுக்காக பட்ஜெட்டில் ஒன்றுமே செய்யப்படவில்லை” என்றார்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.