அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு மேயர் திரு.து.கலாநிதி அவர்கள் முன்னிலையில் கலந்து கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1400 மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் சுமார் 4,90,000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “கனவுகள் மெய்ப்படும் ” District Vision 2030 “என்ற தலைப்பில் புத்தகத்தினை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார்
வெளியிட்டரர்.
தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் ஐந்தாண்டு சாதனை மலரினை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் வெளியிட்டரர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் திரு.செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திரு.மா.கண்ணன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி வ.சந்தியா உட்பட அனைத்து துறைச்சார்ந்த உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று(07.03.2026)
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த