இராசிபுரம், வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனின் இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கம், இராசிபுரம் அரிமா சங்கம் மற்றும் சேலம் ஶ்ரீ கோகுலம் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இரத்ததான முகாமானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை கல்லூரியின் முதல்வர், முனைவர் எஸ்.பி.விஜய்குமார், சமுதாய செயல்பாட்டுத் தலைவர் முனைவர் எம். ராமமூர்த்தி, இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு ந.ராதாகிருஷ்ணன், ஶ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.அர்த்தநாரி, மருத்துவர் ஜெ.நடராஜன், மருத்துவ அதிகாரி டாக்டர் நா.ஷியாம், மக்கள் தொடர்பு அலுவலர் கி.சுரேஷ், இராசிபுரம் அரிமா சங்கத்தின் தலைவர் ரா.பெரியசாமி, செயலாளர் மா.மூர்த்தி மற்றும் க.சிவமணி, பொருளாளர் ப.சிவகுமார் மற்றும் மா.ராகவன், மா.தங்கதுரை, ரமேஷ் (எ ) பச்சமுத்து, கதிரவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இம்முகாமில், சேலம் ஶ்ரீ கோகுலம் மருத்துவமனை இரத்த வங்கிக்காக கல்லூரி மாணவர்கள் சுமார் 41 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கினர். அவர்களுக்கு பழச்சாறு மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன.
இரத்ததானம் செய்த மாணவர்களுக்கு இரத்தவங்கியின் மருத்துவர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
| Madurai Mani <maduraimaninews@gmail.com> |

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்