தமிழக ஆளுநரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காலை இரண்டாவது முறையாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்துப் பேசினார்.
நேற்று நடந்த முதற்கட்டச் சந்திப்பின்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யிடம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை நிரூபிப்பதற்கான ஆவணங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதனடிப்படையில், இன்று காலை தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகை வந்த விஜய், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆதரவு அளிக்கும் இதர கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை முறைப்படி சமர்ப்பித்தார்.
ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், இன்று மதியம் சுமார் மூன்றரை மணி அளவில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பின் பின்னணி மற்றும் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தை புரட்டி போட்டு உள்ளது.

More Stories
மே. வ தேர்தல் :உச்ச நீதிமன்றத்தை நாடும்திரிணாமுல் காங்கிரஸ் ?
விஜய்யிடம் தமிழக ஆளுநர் கூறியது என்ன? – வெளியான விளக்கம்
தவெக ஆட்சியமைப்பில் புதிய சிக்கல்.. விஜய்க்கு ஆளுநர் வைத்த ஒரே நிபந்தனை – சூடுபிடிக்கும் அரசியல்!