பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இதில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. பின் ஏப்.3ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர். ஆனால், இதுவரை படத்துக்கான புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்கப் படவில்லை. இதனால் இப்படம் மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

More Stories
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy
மதுரை பின்னணியில் ஜீவா நடிக்கும் படம்! | Jiiva | Lark Studios
சூரியின் `மண்டாடி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Soori | Mandaadi