July 1, 2026

மீண்டும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மாநிலங்​களவை​யின் எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே மீண்​டும் அதி​காரப்​பூர்​வ​மாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அண்​மை​யில் நடை​பெற்ற மாநிலங்​களவை இடைத்​தேர்​தலில் கர்நாட​கா​வில் இருந்து மீண்​டும் போட்​டி​யின்​றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேற்று எம்​.பி.​யாகப் பதவி​யேற்​றுக் கொண்​டதைத் தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யானது.

நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரும், அக்​கட்​சி​யின் தேசி​யத் தலை​வரு​மான மல்லிகார்ஜுன கார்கே (84), கடந்த சில ஆண்​டு​களாக எதிர்க்கட்சித் தலை​வ​ராகப் பணி​யாற்றி வந்​தார். அவருடைய பதவிக் ​காலம் அண்​மை​யில் நிறைவடைந்​ததைத் தொடர்ந்​து, அவர் மீண்​டும் கர்​நாடக மாநிலத்​தில் இருந்து மாநிலங்​களவை உறுப்​பின​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

நேற்று நாடாளு​மன்​றத்​தில் அவர் முறைப்​படி பதவிப் பிர​மாணம் எடுத்​துக்​கொண்​டார். இதைத் தொடர்ந்​து, மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக அவர் தொடர்ந்து நீடிப்​பார் என்று காங்கிரஸ் கட்​சித் தலைமை அறி​வித்​துள்​ளது.

எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக மீண்​டும் பொறுப்​பேற்​றுள்ள மல்லிகார்ஜுன கார்​கேவுக்கு இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள திமுக, திரிண​மூல் காங்​கிரஸ், சமாஜ்​ வாதி உள்​ளிட்ட பல்​வேறு எதிர்க்​கட்​சிகளின் தலை​வர்​கள் தங்​களது வாழ்த்​துகளைத் தெரிவித்​துள்​ளனர்.

நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகளின் குரலை வலு​வாக ஒலிப்பதிலும், கூட்​ட​ணிக் கட்​சிகளை ஒருங்​கிணைத்​துச் செயல்படு​வ​தி​லும் கார்​கே​வின் அனுபவம் மிக முக்​கிய​மானது என்று அவர்​கள்​ குறிப்​பிட்​டுள்​ளனர்​.

Spread the love