சென்னை: முதலமைச்சர் அலுவலக இடமாற்றம் தொடர்பாக நடைமுறை சிக்கல்களை பட்டியலிட்ட தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்துக்கு மாற்றப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக இடமாற்றம் தொடர்பாக நடைமுறை சிக்கல்களை பட்டியலிட்ட தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் அலுவலக இடமாற்றத்துக்காக பிற துறை அலுவலகங்களை மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இடநெருக்கடி குறித்து தலைமைச் செயலக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். தற்போதைய சூழலில் பல துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்வது பட்ஜெட் பணிகளை பாதிக்கும். 9ம் தளத்திலும் 3ல் ஒரு பங்கு இடம் எடுக்கப்படுவதால் ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படும். வணிகவரி, பதிவு, அறநிலையத்துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது ஏற்புடையதல்ல. அரசு துறை அலுவலகங்களை மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு