May 29, 2026

மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீவிர ஆலோசனை

புது டெல்லி: மேகேதாட்டு அணை திட்ட விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை​யும், மறு ஆய்வு மனுவை​யும் உச்ச நீதி​மன்​றம் தள்ளு​படி செய்த நிலை​யில், அடுத்த கட்ட நடவடிக்​கை​யாக சீராய்வு மனு தாக்​கல் செய்​வ​தா, தேசிய பசுமை தீர்ப்​பா​யத்தை நாடு​வதா என்​பது குறித்து தீவிர ஆலோ​சனை​யில் தமிழ்​நாடு அரசு ஈடு​பட்டு வரு​கிறது.

மேகே​தாட்டு அணை திட்​டம் தொடர்​பான விரி​வான திட்ட அறிக்கையை ஆய்வு செய்​யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்​துக்​குத் தடை​வி​திக்​கக் கோரி தமிழக அரசு, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்க தலை​வர் அய்​யாக்​கண்ணு உள்​ளிட்​டோர் சார்​பில் தாக்​கல் செய்த மனுக்களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையி​லான அமர்வு கடந்த நவம்​பர் 13-ம் தேதி விசா​ரித்​தது.

தமிழ்​நாடு அரசின் இந்த மனு அவசரப்​பட்டு தாக்​கல் செய்​யப்​பட்டுள்​ள​தால் விசா​ரணைக்கு ஏற்க முடி​யாது, காவிரி வழக்​கின் தீர்ப்​பின் படி தண்​ணீரை திறக்க மறுத்​தால் கர்​நாடக அரசு நீதிமன்ற அவம​திப்​புக்​குள்​ளாகும். மேகே​தாட்டு அணைக்​கான விரி​வான திட்ட அறிக்​கைக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டால் அதை எதிர்த்து தமிழ்​நாடு அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரலாம் என்று தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவு காவிரி வழக்​கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்​புக்கு முரணாக இருப்​ப​தாக​வும், மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்​கான விரி​வான திட்ட அறிக்​கைக்கு ஒப்​புதல் அளிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​துக்கு அதி​காரம் இல்லை என்​றும் தெரி​வித்து தமிழ்​நாடு அரசின் சார்​பில் மறு ஆய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. மறுஆய்வு மனு இந்த மனுவை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் கே.வினோத் சந்​திரன், வி.எம். பஞ்​சோலி அடங்​கிய அமர்வு கடந்த ஏப்​ரல் 15-ம் தேதி விசா​ரித்​தது.

தீர்ப்​பில், ‘‘மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்கு எதி​ரான மனுவை நிராகரித்த தீர்ப்பை மறுஆய்வு செய்​யும் மனுவை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்க விடுத்த தமிழ்​நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படு​கிறது. தமிழக அரசின் மனுவை தள்​ளு​படி செய்து உச்​சநீ​தி​மன்​றம் கடந்த நவம்​பர் 13 ம் தேதி கூறிய தீர்ப்பை ஆய்வு செய்​வதற்​கான முகாந்​திரம் இல்​லை.

இதன்​படி தமிழ்​நாடு அரசின் மறுஆய்வு மனு தள்​ளு​படி செய்யப்படு​கிறது’’ என தெரிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அடுத்த கட்ட நடவடிக்​கை​யாக தீர்ப்பை சீராய்வு செய்​யக் கோரி மனு தாக்​கல் செய்​வ​தா, திட்​டத்​துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்​பா​யத்தை நாடு​வதா என்​பது குறித்து தீவிர ஆலோ​சனை​யில் தமிழ்​நாடு அரசு ஈடு​பட்டு வரு​கிறது.

Spread the love