June 23, 2026

மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்

போக்குவரத்து துறை தகவல்

சென்னை: மொஹரம் பண்​டிகை தொடர் விடு​முறையையொட்டி சென்​னை​யில் இருந்து 1,432 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஜூன் 26-ம் தேதி (மொஹரம் பண்​டிகை), 27-ம் தேதி (சனிக்​கிழமை), 28-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை) தொடர் விடு​முறையை முன்​னிட்டு ஜூன் 25, 26, 27 ஆகிய நாட்​களில் சென்​னை​யில் இருந்​தும் பிற இடங்​களில் இருந்​தும் அதி​க​மான பயணி​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதை கருத்​தில்​கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு 25-ம் தேதி (வி​யாழக்​கிழமை) 525 பேருந்​துகளும், 26 மற்​றும் 27-ம் தேதி​களில் தலா 315 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு வியாழக்​கிழமை 85 பேருந்​துகளும், 26 மற்​றும் 27-ம் தேதி​களில் தலா 75 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​தில் இருந்து 25 முதல் 27-ம் தேதி வரை தலா 14 பேருந்​துகளும், பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களில் இருந்து பல்​வேறு ஊர்​களுக்கு 200 சிறப்​புப் பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்​களில் இருந்து சென்னை மற்​றும் பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் 615 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தொலை​தூர பயணம் மேற்​கொள்ள இருக்​கும் பயணி​கள் கூட்ட நெரிசலை தவிர்க்​கும் பொருட்டு தங்​களது பயணத்​துக்கு www.tnstc.in இணை​யதளம் மற்​றும் டிஎன்​எஸ்​டிசி செயலி மூலம் முன்​ப​திவு செய்து பயணிக்​கலாம்.

சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போ​திய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love