April 27, 2026

ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகை

சென்னை: ரயில்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு பெட்​டிகளில் பயணிக்க, இனி, யுடிஐடி என்​னும் தேசிய தனித்​து​வ​மான அடை​யாள அட்டை பயன்​படுத்​தலாம் என, ரயில்வே வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

இது குறித்​து, ரயில்வே வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: இந்​திய ரயில்வே வாரி​யம் சார்​பில் இயக்​கப்​படும், ஒவ்​வொரு சாதாரண மற்​றும் விரைவு ரயில்​களில், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சிறப்பு பெட்​டிகள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றில் பயணிக்க, ரயில்வே வாரி​யம் வழங்​கும் கட்டண சலுகை, பாஸ் பெற்​றவர்​கள் மட்​டும் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதர மாற்​றுத் திற​னாளி​கள், முன்​ப​தி​வில்​லாத சாதாரண பெட்​டிகளில் கட்​ட​ணம் செலுத்தி பயணித்து வந்​தனர். இந்​நிலை​யில், தேசிய மாற்​றுத் திற​னாளி நலத்​துறை வாயி​லாக, யுடிஐடி என்​னும் தனித்​து​வ​மான அடை​யாள அட்டை பெற்ற அனை​வரும், இப்​பெட்​டிகளில் பயணிக்​கலாம்.

ரயில்வே வாரி​யத்​தின் கட்டண சலுகை பாஸ் பெற்​றவர்​களும் இப்​பெட்​டிகளில் பயணிக்​கலாம். அத்​தகைய பாஸ் பெறாத மாற்​றுத் திற​னாளி​கள், கட்டண டிக்​கெட் பெற்​று, தங்​கள் யுடிஐடி அட்​டையை காட்​டி, இந்த சிறப்பு பெட்​டிகளில் பயணிக்​கலாம்.

அனு​ம​தி​யின்றி இப்​பெட்​டி​யில் பயணிக்​கும் இதர பயணி​கள் மீது, ரயில்வே சட்​டத்​தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Spread the love