June 7, 2026

ராகுல் காந்தி முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கு கார்கே வேட்பு மனு தாக்கல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் காலி​யாக​வுள்ள 4 மாநிலங்​களவை இடங்​களுக்கு வரு​கிற ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான வேட்பு மனு தாக்​கல் வரு​கிற 8-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

இந்​நிலை​யில் காங்​கிரஸின் வேட்​பாள​ராக அக்​கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே நேற்று முன் தினம் இரவு அறிவிக்​கப்​பட்​டார்.

இதையடுத்து கார்கே நேற்று மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமை​யா, காங்​கிரஸ் மாநில தலை​வர் பி.கே.ஹரிபிர​சாத் ஆகியோ​ருடன் பெங்​களூரு​வில் உள்ள விதான சவு​தாவுக்கு வந்​தார்.

சிறிது நேரம் விதான சவு​தாவை சுற்றி பார்த்​தனர். பின்​னர் கார்கே காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களின் முன்​னிலை​யில் சட்​டப்​பேரவை செய​லா​ளரிடம் தனது வேட்பு மனுவை தாக்​கல் செய்தார்.

இதுகுறித்து காங்​கிரஸ் மாநில தலை​வர் பி.கே.ஹரிபிர​சாத் கூறுகை​யில், “நாட்​டின் மூத்த அரசி​யல் தலை​வ​ரான கார்கே மீண்​டும் மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிடு​வது மகிழ்ச்​சி​யான விஷ​யம். எங்​களுக்கு சட்​டப்​பேர​வை​யில் உரிய பலம் இருப்​ப​தால் அவர் நிச்​ச​யம் வெற்றி பெறு​வார். பாஜகவை கருத்​தி​யல் ரீதி​யாக எதிர்​கொள்ள கார்கே போன்ற அறி​வார்ந்த ஆளு​மை​கள் மாநிலங்​களவை​யில் இருப்​பது காலத்​தின்​ தேவை ஆகிறது’” என்​றார்​.

Spread the love