ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களின் ஐப்பசி திருவிழா கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், கைக்குழந்தைகளுடனும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அக்னிகுண்டத்தில் தீ மூட்டி வழிபட்டார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற தேரோட்டத்தை அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து கடைவீதியில் நிலைநிறுத்தினர். மறுநாள் தேர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைய உள்ளது. விழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது. காவல்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

More Stories
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களுடன்,
கோவையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் – ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு!
திருப்பூர்