May 31, 2026

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்: பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூரு/புதுடெல்லி: கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் ராஜி​னா​மாவை ஆளுநர் ஏற்று கொண்​டார். இதைத்​தொடர்ந்​து, புதிய முதல்​வரை தேர்வு செய்ய மாநில காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் பெங்​களூரு​வில் இன்று கூடு​கிறது. புதிய அமைச்​சரவை தொடர்​பாக சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்று மேலிடத் தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர்.

கர்​நாடக முதல்​வ​ராக‌ சித்​த​ராமையா 3 ஆண்​டு​களை நிறைவு செய்த நிலை​யில், காங்​கிரஸ் மேலிடம் அவரை பதவி வில​கு​மாறு வலி​யுறுத்​தி​யது.

இதையடுத்து நேற்று முன்​தினம் அவர் தனது முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​தார். கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், சித்​த​ராமை​யா​வின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார்.

மேலும், அமைச்​சர​வையை கலைப்​ப​தாக அறி​வித்த ஆளுநர், புதிய முதல்​வர் பதவி​யேற்​கும்​வரை காபந்து முதல்​வ​ராக தொடரு​மாறு சித்​த​ராமை​யாவை கேட்​டுக் கொண்​டார். இந்​நிலை​யில் சித்​த​ராமையா தனது மகன் யதீந்​திரா உடனும், டி.கே.சிவகு​மார் தனது சகோ​தரர் டி.கே.சுரேஷ் உடனும் நேற்று முன்​தினம் இரவு டெல்​லிக்கு சென்​றனர். அங்கு மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மேலிடத் தலை​வர் ரந்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரை தனித்​தனி​யாக சந்​தித்​துப் பேசினர்.

அந்த சந்​திப்​பில், புதிய முதல்​வர் மற்​றும் அமைச்​சரவை குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. சித்​த​ராமையா தரப்​பில் தனது மகனும் காங்​கிரஸ் எம்​எல்​சி​யு​மான யதீந்​தி​ரா​வுக்கு அமைச்​சர் பதவி வழங்​கு​மாறு கோரிய​தாக தெரி​கிறது. டி.கே.சிவகு​மார் நிருபர்​களிடம் கூறும்​போது, ‘‘பெங்​களூரு​வில் சனிக்​கிழமை காலை​யில் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் நடை​பெற இருக்​கிறது. அதில் அடுத்த முதல்​வரின் பெயர் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும். புதிய அமைச்​சரவை குறித்து பின்​னர் விவா​திக்​கப்​படும்” என்​றார்.

அமைச்​சர் பதவி பெறு​வதற்​காக பிரி​யங்க் கார்​கே, பரமேஷ்வர், பொன்​னண்​ணா, ரிஸ்​வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் மூத்த எம்​எல்​ஏக்​கள் டெல்​லி​யில்​ மு​காமிட்​டுள்​ளனர்​. மேலிடத்​ தலை​வர்​களை சந்​தித்​து அமைச்​சர​வை​யில்​ ​வாய்​ப்​பு அளிக்​கு​மாறு அவர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

Spread the love