
சிலம்பரசன் நடித்த ‘சிலம்பாட்டம்’ திரைப்படம் புது பொலிவுடன் மீண்டும் வெளியாகிறது. சிம்பு இரண்டு வேடங்களில் நடித்து 2008-ம் ஆண்டு வெளியான படம், ‘சிலம்பாட்டம்’. பிரபு, சினேகா, கருணாஸ், கிஷோர், சந்தானம், சனா கான் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தைச் சரவணன் இயக்கினார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இப்படத்தை லக் ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தயாரித்திருந்தனர். இந்நிலையில் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டுபிப். 6-ம் தேதி ரி ரிலீஸ் ஆகிறது. இதை எல்மா பிக்சர்ஸ் சார்பில் எத்தில் ராஜ் வெளியிடுகிறார்.

More Stories
‘ஏழு கடல் ஏழு மலை’யில் புதிய உலகம்
நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’
“சினிமா கொடுத்த மனப்பக்குவம்”- ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி